இன்று 11.03.24 இணைய கால கவியரங்கில் நான் வாசித்த ஹரி வல்லபன் கவிதை கீழே .

இருட்டுவதற்கு முன்னால்
வீடு வந்து சேர்;
பெரிதாய் மழை
வெளியில் போய்த்தான்
ஆகணுமோ?
உச்சி வெயில் மண்டையைப்
பிளக்குது..
போகலாமே
சாயங்காலம்?
எழுந்து நடக்கையில்
கையில் தடியின்றி நடவாதே!
.. எல்லாம்
சொல்கிறது
வயது.
. 11.03.24.
