அழகியசிங்கர்/ஜாக்கிரதை தேர்தல் நெருங்குகிறது…

இன்னும் சில தினங்களில்
தேர்தல் களம் சூடு பிடிக்கும்…

யார் யாரெல்லாம்
எப்படியெல்லாம்
பல்டி அடிப்பார்களென்று
தெரியாது

தேர்தலில் அடிபடுகிற
எந்தக் கட்சியும்
அள்ளி வீசுகிற வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதில்லை

போகிறப்போக்கில்
வாய்க்கு வந்ததைப்
பேசுகிறவர்கள்

ஏழாண்டுகளாக
கமல்ஹாசன் நடத்தும்
மக்கள் மையக் கட்சியைப் பற்றி
என்ன சொல்வது?
என்னமா பல்டி
அடித்து விட்டார்?

இதற்கு
சூப்பர் ஸ்டார் பரவாயில்லை

சினிமா நட்சத்திரங்களெல்லாம்
ரியல் லைப்பில்
தேர்தலில் இறங்கி
நகைச்சுவைப் பாத்திரங்களாகி விட்டார்கள்

நீங்க
யாருக்கு ஓட்டுப்
போட்டால் என்ன?
போடாவிட்டால் என்ன?