சசிகலா விஸ்வநாதன்/ சிவோகம் “சிவாய வசி” என்று ஓது!

தவம் முனை!
சகம் வசமாக
சித்திகள் மெய்யாகும்

சிதானந்த வெளியில் சக்தியுடன் நடனமாடும் ஈசனில்
ஒன்றலாம்!

சிவக்கனல் உயர் நடுவில் நிற்க;
அருட் சக்தி இருபுறமும் கனிய;

இருதலை தீ ;அது,
இறையோனின் சோதியே!