
(விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 10வது கவியரங்கம், நாள் 13 03 2024 கிழமை புதன் நேரம் மாலை 05.10 “கோபம் கொள்ளாதே மனிதா” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.)
நொடிக்கு நூறு தரம்
கோபம் கொள்ளும் மனிதா
என்ன சாதிக்கிறாய்? 1
உந்தன் கோபம்
மெல்ல உன்னை அழித்துவிடும்
தளர்வடைவாய் மனமே 2
யார் மீதோ கோபம் கொண்டால்
பார் சிறிதும்
கண்டு கொள்ளாதே 3
சினமெனும் சீற்றம்
எய்தவரைச் சாய்த்துவிடும்
கையிலெடுத்தவரை மாய்த்துவிடும் 4
மனிதா மனம் கெடும்
உடல் கெடும்
உறவுகள் பந்தம் கெடும் 5
சொந்தம் விட்டு விலகும்
சொத்துக்கள் கரையும்
சொகுசு வாழ்வு
கண்ணெதிரே மறையும். 6
சிட்லபாக்கம்
13 03 2024 மாலை 05.30
