தஞ்சாவூர் ஹரணி கவிதை

நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 11 – நாள் . 14.3.2024

மிருகங்களைப் போலவே
நிறைய அலைகிறார்கள் சாலைகளில்..

அவர்களும் வாழத்தானே வந்தவர்கள்
ஏன் இப்படி வாழவைக்கிறீர்கள்?

புலம்புகிறார்கள்
அழுகிறார்கள்
அமைதியாகிறார்கள்
சினங்கொள்கிறார்கள்..

பேச்சுதான் ஆறுதல்
அவர்களை வீட்டிலிருத்தவும்
வீதியில் நிறுத்தவும்..

அரசு உட்பட யாரும்
கண்டுகொள்வதேயில்லை
தேர்தல் வந்தால் மட்டும்
தேசம் சாபவிமோசனம்
பெற்றதுபோல பொலிகிறது..

ஒருபோதும் பொலிவதில்லை
எந்த சிறுவுயிரும் எப்போதும்
புதைக்குழிக்குள் புதைந்துவிட்ட
மானுடநேயம் காப்பாற்றுவாரில்லை
காப்பு என்பதே சிறையாய்..