
(விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 12வது கவியரங்கம்,)
தன்னை விட்டுத் தானே
விலக முயற்சி செய்தான்
ஆசைகள் களைந்தான்
சொந்தங்கள் மறந்தான். 1
தன்னிலையில் மிதந்தான்
எந்நிலையிலும் உலகை மறந்தான்
உடலில் உயிர்
நீக்கமற இருப்பது கண்டு, 2
துணுக்குற்றான், அதைவிட்டுப் பிரிந்திட
முடியாத மனநிலை
உந்தித்தள்ள அவன் எண்ணம்
கேள்விக்குறியாகி போச்சே. 3
