ஹரணி/தேர்தல் கவிதைகள்

தேர்தல் என்பா 1

தேர்தல் வருகிறது தேர்தல் தேறுதல்
மட்டுமே வாய்த்த வரம் அரிதாய்
தென்னை மரத்தில்கூடத் திராட்சை காய்க்கும்
தேர்தல் கானல் நீரே.

தேர்தல் என்பா 2

தேர்தல் வருகிறது தேர்தல் பொய்பேசி
புரட்டும் உருட்டுமாய் வாக்களிக்க வேடமிட்டு
விதவிநமாய் வித்தை காட்டிப் பல்லிளித்து
வருவார் வரமல்ல சாபம்

: தேர்தல் என்பா 3

தேர்தல் வருகிறது தேர்தல் வரட்டுமே
வாக்கிற்குப் பணம் எல்லாரிடமும் வாங்கி
கூச்சமின்றி ஓடிப்போய் மையிட்டு வாக்களித்தால்
போதுமே புண்ணிய வாழ்வே.

தேர்தல் என்பா 4

தேர்தல் வருகிறது தேர்தல் பாருங்கள்
நகைக் காட்சிகள் நன்றாய் காணலாம்
காப்புக் கடவுள்கள் கட்சிக் கொடியுடன்
பட்டுவாடாப் பட்டியலில் பலிகள்.

தேர்தல் என்பா 5

தேர்தல் வருகிறது தேர்தல் பிரியாணி
மணக்கும் தன்மானம் பறக்கும் கைகள் திருவோடாகும் திருக்காட்சி தேசப் பதக்கம
தேறுதல் மாறுதலல்ல மயக்கம்.