சுரேஷ் ராஜகோபால், /”குடையுடன் போ”

கடும் கோடையில்
வெப்பம் தகிக்கையில்
நடந்து கடைக்குக் கிளம்பினேன்
மழை வரும்
குடை கொண்டு போ
என்றாள் அம்மா.
நிராகரித்துக் கிளம்பினேன். 1

அம்மா பெய்யெனச் சொன்ன
மழை; பெய்தே தீர்த்தது,
நகரமே ஸ்தம்பித்தது
இந்த மழைக்குக்
அந்தக் குடையே தாங்காது. 2

ஆட்டோவில் வீடு திரும்பினேன்
வீட்டு முற்றம் நிரம்பிச்
சிரித்தது, நீர் தெரிந்தது
அம்மா எடுத்துக் கொடுத்த
குடை, வீட்டு வாசல் கதவில்
தொங்குவது தெரிந்தது. 3

சிட்லபாக்க