அழகியசிங்கர்/தேர்தல் சிந்தனை 3

இந்த
வாக்களனை
நோக்கி
கூட்டத்தோடு வந்தார்
சில நிமிடங்களே
இருந்தார்
சில வார்த்தைகளே
பேசினார்
கிளம்பிப் போய் விட்டார்

நான்
ஓட்டும் போடும்போது
அவர் முகமே
ஞாபகத்தில்
வரவில்லை