ரியோகன் கவிதை

மொழி பெயர்த்தவர் : க.மோகனரங்கன்

விரலால் நீங்கள்
நிலவைச் சுட்டிக்காட்டலாம்
நிலவைக்கொண்டு நீங்கள்
விரலைப் புரிந்து கொள்ளவும் முடியும்
விரலும் நிலவும்
வெவ்வேறானவை அல்ல
ஒரே மாதிரியானவையும் அன்று.
கற்பவரை விழிப்படையச் செய்திட
உருவகமாக மட்டுமே அது உபயோகிக்கப்படுகிறது.
நீங்கள் விஷயங்களை
உள்ளது உள்ளவாறே
அறிந்துகொண்டபிறகு
அங்கே நிலவும் இல்லை
விரலும் இல்லை.