சுரேஷ் ராஜகோபால், / “நிழலுக்கு இடமில்லை”

மக்கள் தொகை அதிகரிப்பு
வீட்டுக்கொரு பிள்ளை கூட அதிகமாம்
கடவுள் கொடுத்த வரம்
தட்டிக் கழிக்கவா முடியும் . 1

நாங்கள் நிற்கவே இடமில்லை
கூட்டம் அலைமோதியது
நிழலுக்குக் கொஞ்சம் இடம் வேண்டுமாம்
நிழலை விரட்டிவிட்டு வந்தேன். 2

விரட்டப்பட்ட எல்லோருடைய நிழல்கள்
கூட்டமாக நியாயம் கேட்டு
போராட்டமா செய்யும்: இல்லை
எங்களை வஞ்சிக்குமா? தெரியவில்லை.3