
சிட்டுக் குருவி
சன்னல் வெளியே;
சன்னமாய் அழைக்க;
என்னவென்று வினவ;
என் கண்ணில் தெரிந்தது,அதன் கையறுநிலை.
சிறு தானியம் இறைத்தேன்.
சிறு கிண்ண நன்னீர் விளம்பினேன் .
என்னைச் சுற்றி தத்தித் தத்திக் குதித்தது.
வேப்பமர உச்சிக்குப் பறக்க;
இப்போது என் தனிமையும் நானும்;
உண்டியும் திண்டியும் உண்டு;
எனக்கிங்கு;
கூடவே கனமான தனிமை.
சிட்டுக் குருவிபோல் பறக்கவா இயலும்?
வீடென்ற சிறை!
எப்போது விடுதலை?
20-3-2024
