விஜயலக்ஷ்மி கண்ணன் /நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?

நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?
நானா எழுதுகிறேன்!
நான் ஏன் சுவாசிக்கிறேன்?
என்னைக் கேட்டா
மூச்சு மேலும் கீழும் போய் வருகிறது?
சில நேரம் ஏறி இறங்காமல் தவிக்கிறதே!
என் சொற்க்களை மாலையாக்கி அழகு பார்க்கிறேன்.
அழகை எப்பொழுதும் ரசிக்கப் பிடிக்கும் பழக்கம்.
மனதின் ஓரத்தில் ஒதுங்கி நின்று சிரிக்கும்,
பல நேரம் அழும் உணர்வுகளை

நான் எப்படிச் சொல்வேன்?
கவிதை எழுதாமல் எண்ணத்
தேக்கங்கள் கரையாமல் அடிப் பிடித்து விடுமே.
என்ன செய்வேன்?
போகட்டும்.
இப்படியே காலமும் கவிதையும்.