சுரேஷ் ராஜகோபால், /”தன்பாதையிலே நிலவு”

நிலவு வானில் தெரியவில்லை
என்பதால் அன்று
இரவு வராதா என்ன?
வந்துவிடும் கண் அயர்வாய். 1

கண்சிமிட்டும் விண்மீன்கள் நடுவே
வலம்வரும் நிலவுக்கு
யார்தான் வழிகாட்ட வேண்டும்
தன்போக்கிலே அது வந்துவிடும். 2

நிலவு தன் காதலன்
கதிரவனைத் தேடி
நாளெல்லாம் சுற்றும்
தோன்றும் போது தோன்றிவிடும். 3

இரவும் வரும் அதில்
பகலும் வரும்; கண்கொட்டாது
கதிரவனைச் சுற்றிவரும் தன்பாதையிலே
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது தன்பயணம். 4

சிட்லபாக்கம்