சசிகலா விஸ்வநாதன்/மாற்றுவார்; மாறுவாய்

ஓடியே தேடு;
தொல்லையின் தோற்றுவாய்;
மாற்றுவாய்,மாறுவாய்,
மாறுதலை ஏற்க;
மாறுதல் ஒன்றே,
என்றும் மாறாது.
காற்றைப் போல்,
ஒளியைப் போல்,
ஒரு மலரின் வாசம் போல்;
சட் எனத் தூறி நிற்கும் சாரல் போல்;
காற்றில் கலந்து வரும் குழலோசை போல்;
எளிதாய் இருப்பது எளிது;
தொல்லை; இல்லை என்றே ஆகும்;
தொல்லை தொலைந்தே போகும்.