பாலும் திரிந்ததடி கிளியே

எஸ்.சுரேஷ்

இப்பொழுதெல்லாம்
வானியலாளர்கள்
பெய்யெனப்
பெய்கிறது மழை..
முன்னதாகவே
போர்க்கால அடிப்படையில்
பால் பாக்கெட்டுகளை
வாங்கிக் குவித்தேன்..
ஒருவாரத்திற்கான
தோசை மாவும் தயார்..
காய்கறிகள்
கூடைநிறைய..
இன்னும் பிரட்
பழங்கள்..
குளிர்சாதனப்பெட்டி
கெஞ்சியது..
நான் என்ன
தலையணையா?
மழையே உனக்காச்சு..
எனக்காச்சு..
பெருமழை வந்தது..
இரட்டையர் அல்லவா?
மழையுடன் பிறப்பாம்
மின்வெட்டும் வந்தது..
மழை தொடங்கித்
தொடர்ந்து
ஐந்தாம் நாள் முடிந்தது..
மின்வெட்டும தொடங்கித்
தொடர்ந்து
தொடர்கிறது..