சுரேஷ் ராஜகோபால், /”இணைந்த கைகள்”

காதலில் இணைந்த கைகள்
நமக்கான இன்பத்தைத் தரட்டும்
எண்ணம் போல வாழ்வோம்
வண்ண ஒளி தழுவட்டும். 1

வடிவத்தில் மெருகேறும்
வதனத்தில் சீர்மிகும்
நல்லதை நாடுவோம்
நல்லதே பெறுவோம். 2

கன்னம் குழிய சிரிப்போம்
முன்னமிருந்த நாணம் மலையேற
எளிய வாழ்வினில்
இனிமை காண்போம் 3

எந்நாளும் சிறக்கட்டும்
எதிர்காலம் வளமாக இருக்கட்டும்
இந்நாள் போனால் புதுநாள் வரும்
அந்நாளிலும் இன்பமே துய்ப்போம். 4