மீனாட்சி பாலகணேஷ்/உலக சிட்டுக் குருவி தினம்!

இன்று உலக சிட்டுக் குருவி தினம்!
ம்ம்ம்! எங்கே போச்சு அவை ??
விரட்டிவிட்டோம்,
செய்தி பரிமாற்ற தொழில்நுட்ப வளர்ச்சியில்
.
“உலக தினம் கொண்டாடி” என்ன பயன் ?
மஹாகவி பாரதியார் இன்று இருந்தால் ????
அந்தக் குட்டி மூக்கையம்
துருதுரு கால்களையும் உடலையும்
புகழ்ந்து பத்தாயிரம்
பாட்டெழுதிக் கொண்டாடியிருப்பாரே!

காக்கைச் சிறகினில்
நந்தலாலாவைக் கண்டதுபோல்
குட்டி மூக்கில் குழந்தை முருகனைக்
கொண்டாடியிருப்பாரே!!

நமது கையாலாகாத்தனத்தையும்
எள்ளி நகையாடியிருப்பாரே!
பாரதியே! நீர்
மறுபடி பிறந்து வரலாகாதா ஐயா?