சுரேஷ் ராஜகோபால், /”விதவிதமான எண்ணங்கள்”

மனதில் ஓடும் ஒரு மகிழ்ச்சி
நினைவில் தெரியும் நெகிழ்ச்சி
வசந்த காலம் வந்து விட்டது அது
புன்னகையாக மாறியதோ என்னமோ – தெரியாது. 1

இருளை கிழித்துக் கொண்டு எழுந்தேன்
காலையில் மலர்ந்தேன்
மலர்ந்ததால் நான் மலரல்ல
நான் மலராக முடியாதே. 2

நான் பாடும் போது
நிலவும் தான் பாடுதே
நான் ஆடும் போது
மலரும் சிரித்து ஆடுதே. 3

விதவிதமான எண்ணங்கள்
மனதில் பரவசம் தந்ததே
இது இன்றைய நிலையாகுமே
பரவசத்தில் கண்ணில் நீர்த்துளி. 4