இனிக்கும் தமிழ்/- டி வி ராதாகிருஷ்ணன்

மீண்டும் உரு பெற்ற மன்மதன்

இராமாயணத்தில்…
இராமனைப் பார்த்த சூர்பனகை முதலில் அவன் மன்மதனோ என்று சந்தேகப் பட்டாள்.

பின்,”இருக்காது, மன்மதனுக்குத்தான் உருவம் இல்லையே…இவனுக்கு உருவம்
இருக்கிறதே, எனவே இவன் மன்மதனாய் இருக்க முடியாது ” என்று நினைத்தாள்.

இருந்தாலும் அவளுக்கு சந்தேகம் தீரவில்லை. ஒரு வேளை அந்த மன்மதன் நல்ல
தவம் செய்து, சாப விமோசனம் பெற்று, அதன் மூலம் எல்லோரும் காணும் உருவத்தை
பெற்றுவிட்டானோ என்று மீண்டும் நினைக்கிறாள்.

பாடல்

கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்
இற்றவன், அன்றுதொட்டு இன்றுகாறும், தான்
நல் தவம் இயற்றி, அவ் அனங்கன், நல் உருப்
பெற்றனனாம்’ எனப் பெயர்த்தும் எண்ணுவாள்.

பொருள்

கத்தை கத்தையாக முடி கொண்ட சடையன் (சிவன்) தன் கண்ணால் எரித்ததால்..உருவு
இழந்த மன்மதன்,அன்றிலிருந்து இன்று வரை,நல்ல தவம் செய்து இழந்த உருவை
அடைந்து விட்டானோ என மீண்டும் எண்ணுவாள்
(அதாவது ராமனின் அழகில் மயங்கி அவனை மீண்டு வந்த மன்மதனாக எண்ணுகிறாள்)

Show quoted text