தஞ்சாவூர் ஹரணி

தவளைகளின் அருவருப்பான
குரல்கள்

மலங்களாலும் விலங்குகளின்
சாணங்களாலும் நாற்றமடிக்கும்
வற்றிய குளங்களை விட்டுத்
தவளைகள் எல்லாமும்
கரைக்கு வந்துவிட்டன.

ஒவ்வொரு தவளையும்
ஒவ்வொரு குரலை எழுப்பி
நிலத்தைச் சிதைக்கின்றன..

ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல
என்று அவை குளங்களின் சீரழிவிற்கு
இன்னொரு தவளையைக்
குரலெழுப்பிக் குற்றஞ்சாட்டுகின்றன..

தவளைகளின் அருவருப்பான
குரல்களை இசையாக
குரல்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன
நிலம் அமைதியாக உள்ளது
சரியான தீர்ப்பை எழுதுவதற்கு…

000