ஓட்டுப் போடுபவன் கூற்று !/பி. ஆர். கிரிஜா

அழகிய சிங்கரின் என்பா !

முட்டாள் மனிதன் இருக்கும் வரை
தொகுதி அனைத்தும் கும்பிடும் கரங்கள்
அனைத்தும் வாங்க நாங்கள் தயார்
ஓட்டுப் போடுபவன் கூற்று !

நாளை நன்றாய் பொழுது விடியும்
அனைவரின் வீட்டில் அடுப்பு எரியும்
தேர்தலின் முன் கையில் பணம்
ஓட்டுப் போடுபவன் கூற்று !

ஓட்டுப் போட நாங்கள் தயார்
நாளும் மின்தடை எப்போது நீங்கும் ?
சாலைகள் சீரடையும் நாள் என்று?
ஓட்டுப் போடுபவன் கூற்று !


06/04/2024