வளவ. துரையன்/வெயிலெனும் பாவி

கோடை வெயில்போல் இன்றே
சுட்டெரிப்பதை யாரிடம் போய்ச்சொல்ல?
நேற்றைவிட இன்று அதிகமாய் இருக்குமென்று
தொலைக்காட்சி தினமும் வழக்கமாகப் புலம்புகிறது.
தலையில் கூடை சுமந்து காய்கறி விற்கும்
பாட்டி பரிதவிக்கிறார்.
அவர் உடலெங்கும் வியர்வை நதிகள்.
அனல் மூச்சை அவர் அரற்றியவாறே
விட்டுக் கொண்டிருக்கிறார்.
நடைபாதை வணிகர்களின் படுதாக்கள்
அனைத்தையும் வெயிலெனும் பாவி சுட்டெரிக்கிறான்.
நுங்கு இளநீர் குளிர்பானக் காடுகளில் மழை.
சரி, ஏதாவது நடக்கட்டும்.

One Comment on “வளவ. துரையன்/வெயிலெனும் பாவி”

  1. இன்றைய பொழுதின் நிலையை எடுத்துக் கூறும் கவிதை. ஒரு காட்சியை கண் முன்னே கொண்டு வந்து காட்டி விட்டார். சிறப்பு.

Comments are closed.