அழகியசிங்கர்/ஆட்டிசம்

அந்தக் குழந்தை
பார்ப்பதற்கு
வித்தியாசமாய்
இருந்தான்
ஆட்டிசம் என்றார்கள்
என்னைச்
சுட்டிக் காட்டி
நான் யார்
என்று கேட்டாள்
அவன் அம்மா
என்னை நீண்ட
நேரம் பார்த்தான்

அவனுக்குச்
சொல்ல வரவில்லை

சரி
நான் யார் என்று
எனக்கு
சொல்ல வருதா?