சசிகலா விஸ்வநாதன்/பாய்ஸி ஆற்றங்கரை

இனிய மாலை வணக்கம்
இணைய கால கவியரங்கம்
இன்று நான் எழுதி வாசித்து அளிக்கும் கவிதை


குளிர் பழகி,;
குளிர் விட்டுப் போக…

பாய்ஸி ஆற்றங்கரையோரம்
ஒரு சிறு உலா …

வண்ண வண்ண
சிட்டுக்கள் கட்டியம் கூவ,

எட்டிப் போட்டேன்; நடையை.

இரு சக்கர வண்டியில்
ஆணும், பெண்ணுமாக உற்சாக கூவலோடு …

வயது உடல் வாகு ஒரு
பொருட்டில்லாமல்,

ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல் ஓடிக்கொண்டே இருக்கிறது பாய்ஸி நகர்.

முன்பின் அறியாதவர்களின்…
நல்வணக்கமும்,

அன்பின் விசாரிப்புகளும்,

வினோதமாய் இருந்ததாலும்,
விகற்பமாயில்லை.

வேண்டத் தக்கதாகத்தான் இருக்கிறது.

மலைச்சரிவில்
ஒரு ஒரு கருநிற நெளியும் பாம்பு போல்
நடை சாலை;

கரைபுரண்டு ஓடும் பாய்ஸி ஆறு..

சாலையைச் சார்ந்து, சாரை போல்
விட்டும் தொட்டும்;

நடக்க நடக்க; அலுப்பில்லா அயர்வில்லா நடை!

நகர்ப்புறத்திலேயே
பிறந்து வாழ்ந்த எனக்கு

ஆற்றுப் படுகை நடை ஆனந்தம்.


6-4-2024