மீனாட்சி சுந்தரமூர்த்தி/முடிவென்ன??

இன்று வாசித்த கவிதை.

அழகான தார்ச்சாலை
வரிசை
கட்டி படை இளைப்பாற நிழல்
தரும்
மரங்கள்.

கழுத்தில் கட்டிய மணி
ஜல்ஜல்லென
அசைய தாளம் தப்பாது
வில்வண்டி
இழுத்தோடும் மாடுகள்.

கரும்பும்,வாழையும்,
பலாவும்
மாந்தோப்பும் ,கொய்யாவும்
இரவில்
அச்சமும், பகலில் இனிமையும்
கூட்டும்.

திருவிழா காண வந்து
திரும்ப
இருட்டி விட்டால், வண்டியில்
கட்டிய
லாந்தர் விளக்கொளியில்
பெருமாளை
வேண்டியே பயணம்.

அல்லி ஒன்றில், தாமரை
ஒன்றில் என
முறை போட்டுப் பூத்திருக்கும்
நீர் ததும்பும்
குளங்கள் முகம் காட்டும்.
இதெல்லாம்
முன்பு.

நடப்பு ஏதெனில்,
அல்லிக் குளமதை,
ஒரு நான்கு
பத்து
பெண்டிரை வைத்து தூரெடுத்துச் சீராக்க
முனைந்தது
முடிந்தது தோல்வியில்.

ஓர்புறம் நரிக்குறவர் வீதி,
கல் வீடுகள்.
காலை பயன்பாடு குளக்கரை.

அமரர் ஊர்தி இரண்டு
நிறுத்தி வைக்க
வாகாய் போனது.

ஒரு வாரம் போராடி குப்பைகள்
அகற்றி
தூய்மை.குரவரும், முரடரும்
செவி
சாய்க்க மறுத்து வம்பு.

முடிவென்ன? ஏற்ற பணி
பாதியில்
நின்று போனதுதான்.