அழகியசிங்கர்/ஒரு பூ

என் வீட்டில்
வளர்ந்த
செடியில்
ஒரு பூ பூத்தது
அதைப் பார்த்து
பரவசம் அடைந்தேன்

அதை
என் காதலிக்குக்
கொடுக்க நினைத்தேன்

ஆனால்
இப்போது காதலியை
எங்கே கண்டுபிடிப்பது?

அதனால்
பூவை செடியிலே
விட்டுவிட்டேன்