வளவ. துரையன்/சிட்டுக்குருவி

உன்னுடைய உடைகள் கொடியில் தொங்கிக்கொண்டு
என்னைக் கோபப்படுத்துகின்றன.

ஆறு மாதங்களுக்குமுன்
அலங்கரிக்க வாங்க வந்த அந்தப்
பூ ஜாடி
மலரின்றி வாடி
அனாதையாக அழுகிறது.

பேருந்தின் சன்னல் கம்பியில்

என் கைமேல்
உன் விரல்களை அழுத்தமாகப் பதிந்து ஆறுதல் சொன்னாயே!

அது எவ்வளவு நாள்தான் தாங்கும்?

நீ அறிவாயா?

சிட்டுக்குருவி போல
விரைவாகப் பறந்து வா