தஞ்சாவூர் ஹரணி/சிலவும் பலரும்

எங்கும் கருகாமல்
சுட்ட அப்பளம் கிடைக்கையில்
வற்றல் குழம்பு வாய்ப்பதில்லை…

கருகிய அப்பளம் வாய்க்கிறபோது
முதல்நாள் வைத்த ரசமே
மிஞ்சுகிறது..

பொரித்த அப்பளமோ முற்றிலும்
பொருந்துவதில்லை
மருத்துவ உணவிற்கு..

தொட்டுக்காய்க்கு ஏற்றச் சாப்பாடும்
சாப்பாட்டிற்கேற்ற தொட்டுக்காயும்
ஒருபோதும் அமைவதில்லை..

சில உணவுகள் இப்படித்தான்
பலர் உணர்வுகள் இப்படித்தான்