தஞ்சாவூர் ஹரணி/வறண்ட குளம்..

கருணாசாமி உடனுறை
பெரியநாயகி அம்மன் கோயில்
குளத்தின் கரையில்
மாலையில் நடைப்பயிற்சி..

வறண்டுகிடக்கிறதே குளம்
என்கிறேன்..

அப்படியில்லை ஒருபோதும்
நான் எப்பவும் நிரம்பியே
இருக்கிறேன் காற்றால்
என்கிறது குளம் மௌனமாய்..

நடைபாதை சுற்றிலும் உள்ள
அத்தனை மரங்களும்
குளத்தின் மௌனத்தை
மொழிபெயர்த்து
ஆமோதிக்கின்றன.