அழகியசிங்கர்/அம்மா

எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பான் அந்தக் குட்டிப் பையன். இப்போதெல்லாம் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்று அம்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
அவள் அவனை விட்டுவிட்டுத் தனியாக வீட்டு வேலைகளுக்குப் போவாள்.
பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அம்மா வழக்கமாக எங்கே போயிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். அவன் அங்கு வந்து விடுவான்.
ஒருநாள் அவன் வீட்டில் தனியாக இருந்தபோது அவன் அப்பா யாரோ ஒரு லேடியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.
குட்டிப்பையயன் அந்த லேடியைப் பார்த்து யார் இவங்க என்று கேட்டான். அவன் அப்பாவுக்கு அவன் கேட்ட விதம் பிடிக்கவில்லை. ஓங்கி ஒரு அறை அறைந்தான் அப்பா.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் அப்பா அம்மாவுடன் சேர்ந்து வாழவில்லை.
குட்டிப் பையனுக்கு அம்மாவைத் தவிர யாருமில்லை. அவள் அவனைப்பார்க்கும்போதெல்லாம் கண் கலங்குவாள். அவனைக் கட்டி அணைத்துக் கொள்வாள்.
“ஏன் என்னைத் தேடுண்டு வர்ற?” என்று ஒருமுறை கேட்டாள் அம்மா.
“உனக்கு யாருமில்லை. நான்தான் இருக்கேன்” என்றான் குட்டிப்பையன்.