சுரேஷ் ராஜகோபால் /”கண்ணாடி”

அழகான ஒப்பனை செய்தது
திருப்தி தராமல் சரிசெய்யக்
கண்ணாடியைத் தேடினேன்
அந்த அறையில்
இல்லையே ஏன்?
வெளியே வந்த பொழுது. 1

எதிரே ஆளுயர கண்ணாடி
வரவேற்றது ; ஓடிச் சென்று
ஒப்பனை சரியா என்று பார்த்தேன்
திருப்தி இல்லை;
ஒப்பனையில் குற்றமா?
ஆடியில் குற்றமா? 2