தஞ்சாவூர் ஹரணி/அதிகாரம் பண்ண முடியாது

உங்கள் காதுகள்தாம்
உங்களிடமே இருக்கட்டும்
என்றாலும் எதிராளி
சொல்வதைக் கேட்கத்
தாருங்கள்.,.

உங்கள் திருவாய்தான்
தேவார வாசனையே அடிக்கட்டும்
ஆனாலும்
மற்றவர்கள் சொற்களுக்கு
கொஞ்சம் வாய்மூடி
இருங்கள்..

உங்கள் மனம்போலவே
அவரவர் மனங்களும் அவரவரையே
விரும்பும் உணருங்கள்
நீங்கள்..

அதிகாரம் பண்ணும் அதிகாரத்தில்
இருப்பதால் எல்லாவற்றையும்
அதிகாரம் பண்ணமுடியாது..