அழகியசிங்கர் /

தமிழ் புத்தாண்டே
வாழ்க வாழியே

என்பா 5

1.
.
தமிழ் புத்தாண்டே
வாழ்க வாழியே
தமிழ் புத்தாண்டே
உனக்குக் கோடி
நமஸ்காரம்.எங்கள்
செயல்களில் வெற்றிபெற
உன் கருணை வேண்டும்.

2.

தமிழ் புத்தாண்டே
வாழ்க வாழியே
எல்லோரும் எழுதுகிறார்கள்
எல்லோரும் படிக்கிறார்கள்
சிந்தனை முழுவதும்
தமிழில்தான் நடக்கிறது
தமிழ் சிந்தனைதான் ஓடுகிறது.

3.

தமிழ் புத்தாண்டே
வாழ்க வாழியே
தெரு முழுவதும்
நடமாட்டம் இல்லை
கடைகள் பல
திறக்க வில்லை
தமிழ் எங்கள் மூச்சு

4.

தமிழே அமிழ்தமே
தமிழே அமிழ்தம்
தமிழ் புத்தாண்டே
வாழ்க வாழியே
கவிதை எழுதாத
நாள் இல்லை
தமிழைத் தவிர
நினைப்பதில்லை!

5.

கடந்த பல
வருடங்களாய்
எழுதிக் கொண்டே
இருக்கிறேன்.படித்துக்
கொண்டும்.
தமிழ் புத்தாண்டே
வாழ்க வாழியே
உனக்குத் தலை
வணங்குகிறேன்