ஹைக்கூ கவிதைகள் என்பவை../தங்கேஸ்

ஜப்பானிலிருந்து தோன்றி வளர்ந்தவையாகும்

முதலில் அது ஹொக்கூ கவிதைகள் என்று என்று தான் அழைக்கப்பட்டன பின்பு
மருவி ஹைக்கூ என்று ஆனது .
ஹைக்கூ என்றால் அணுத் தூசி போன்ற சிறிய கவிதை ஆனால் வீரியம் உள்ளது என்று பொருள்படும் .
இது மொத்தம் மூன்று வரிகளை கொண்டது முதல் வரியில் ஐந்து அசைகளும் இரண்டாவது வரியில் ஏழு சைக்கிளும் மூன்றாவது பதில் ஐந்து அசைகளுமாக மொத்தம் 17 அசைகளை கொண்டதாகும்.
இது ஜப்பானில்1603 ஆம் ஆண்டு முதல் 1863 ஆம் ஆண்டு வரை ஜப்பானில் எடோ காலத்தில் ஒரு கலவையாக இந்த கவிதை தோன்றியது .
பின்பு 17 ஆம் நூற்றாண்டில் வந்து மட்சுவோ பாஷோ என்ற துறவி இந்தக் கவிதையை மேலும் மெருகூற்றி மெருகேற்றி அற்புதமாக மாற்றியமைத்தார் .
அவரே இந்த ஹைக்கூ கவிதைகள் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார் அவரை பின்பற்றி அவருடைய சீடர்கள் யோசா பூசன், இசுசோ சிகி என நிறைய கவிஞர்கள் இந்த ஹைக்கூ கவிதையை வளர்த்தெடுத்திருக்கிறார்கள்
உதாரணமாக பாஷோ அவர்கள் எழுதிய ஒரு ஹைக்கூ
” பழைய குளம்
தவளை. குதிக்கிறது
கிளக் சத்தம் “
என்ற கவிதை மிகவும் புகழ் வாய்ந்ததாகும் .
அது போலவே
” உதிர்ந்த பூ
கிளைக்கு திரும்புகிறது
வண்ணத்துப்பூச்சி , ” என்ற கவிதையும் உலகப் புகழ்பெற்றதாகும்.
பொதுவாக ஹைக்கூ என்பது நிகழ்காலத்தில் ஒரு காட்சி படிமத்தை படம்பிடித்து காட்டும் சிறு கவிதையாகவும் ,
கவிஞனின் தலையீடு எதுவும் அற்றதாகவும் இருக்கும் . இதன் காட்சி பிடிமம் வாசிப்பவர்களின் மனதிற்குள் விதவிதமாக
உணர்வுகளை எழுப்ப வல்லது.
இதில் கவிஞனின் சொந்த கருத்து எதுவும் இல்லை . ஆச்சரியம் இடையீடு என்பவைகள் இல்லை. பொதுவாக ஜென் தத்துவத்தை வளர்ப்பதற்கு ஹைக்கூ கவிதைகள் ஜப்பானில் அதிகமும் பயன்பட்டன. தமிழிலும் மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகள் உண்டு பொதுவாக கவிஞர் அமுத பாரதி ஐயா அவர்கள் எழுதிய
” இந்த காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் ” என்ற கவிதை அதிகம் இங்கே பேசப்பட்டிருக்கிறது .
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் தமிழன்பன் அவர்களும் இந்த ஹைக்கூ கவிதைகளை பற்றி நிறையவே பேசி இருக்கிறார்கள் .
கவிஞர் முருகேஷ் அவர்களும் இந்த ஹைக்கூ கவிதைகளை பற்றி நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறார்.
இப்பொழுது தமிழில் சில ஹைக்கூ கவிதைகளை மட்டும் இங்கே பதிவிடுகிறேன் மீண்டும் ஒருமுறை இதைப் பற்றி விரிவாக எழுதலாம்

குழந்தை அழ
மாராப்பு நனைகிறது
வரப்பில் பண்ணையாளர்
(பொன் குமார்)

மணவறை
மெதுவாய் பெருக்குகிறாள்
முதிர் கன்னி
(அறிவு மதி)

அடிக்க
அடிக்க
அதிரும் பறை
(மித்ரா)

கருத்த பெண்
புகுந்தகம் வந்தாள்
கலர் டிவியோடு
(முருகேஷ்)

தீப்பெட்டி
திறந்தால்
பிஞ்சு விரல்கள்
(ஸ்ரீரசா)

தாத்தாவின் கரம் பற்றி
நடக்கும் குழந்தை
தள்ளாடும் நிழல்
(ராஜா)

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றில் ஒன்று முகப் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்

மீண்டும் சந்திப்போம்

.