18.04.2024

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் விருட்சத்தைக் கொண்டு வர முடியாதபடி சதி செய்கிறது என்று நினைக்கிறேன்.
அழகியசிங்கர் : உண்மைதான். அந்த மேட்சுகளைப் பார்ப்தாலே இரவு நேரம் போய் விடுகிறது. பகல் நேரத்தில் முக்கியமான நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது.
மோகினி : வருத்தமாக இருக்கிறது.
அழகியசிங்கர் : உடனே இதைச் சரி செய்ய வேண்டும்.
மோகினி : விருட்சம் 125 இந்த மாதத்திற்குள்ளே வந்து விடுமா?
அழகியசிங்கர் : அப்படித்தான் நினைக்கிறேன். விருட்சம் 125 கொண்டு வருவதற்குள் எனக்கு நானே போராடுகிறேன்
மோகினி : .உங்களுக்கு உதவி செய்ய நினைக்கிற ராஜேஷ்ஷ÷ம் நொந்து போயிருப்பார் இல்லையா?
அழகியசிங்கர் :. ஆமாம். இதில் லைப்ரரி ஆர்டர் வேற சந்தேகமாக இருக்கிறது. போன இதழ் நவீன விருட்சம் (124) கொண்டு வந்து எல்லா லைப்ரரிக்கும் அனுப்பி இருந்தேன். அதற்கான பில் இன்னும் செட்டில் ஆகவிலலை. எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இந்த இதழ் எப்படிக் கொண்டு வருவதென்று.
ஜெகன் : நீங்கள் நேரிடையாகப் போய் விஜாரித்தால் தெரிந்து விடும். அதிகாரிகள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று அப்போதுதான் தெரியும்.
அழகியசிங்கர் : உண்மைதான். ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் என்னால் நேரிடையாகப் போக முடியவில்லை. போனிலோ அவர்களைத் தொடர்புகொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. அடிக்கடி போன் செய்தால் நான் தொந்தரவு செய்பவனாக நினைக்கிறார்கள்.
மோகினி : நீங்கள் நேரிதையாகப் போனால்தான் இதைச் சரிசெய்ய முடியும்.
அழகியசிங்கர் : தேர்தல் முடிந்தவுடன் போகலாமென்று நினைக்கிறேன். என் கவிலை 125 இதழ் எத்தனைப் பிரதிகள் அடிப்பது என்பதுதான்.
மோகினி : அரசாங்கம் கை விடாது. நல்லதே நடக்கும்.
அழகியசிங்கர் : நம்புகிறேன்.
மோகினி : முயற்சி செய்யுங்கள்.
ஜெகன்: இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(பதிவான நேரம் : இரவு 10.23)
