மீனாட்சி சுந்தரமூர்த்தி/குடைக்குள் கடை

சமரசமாய் வாழ, அன்பும்
கருணையும்
சொல்லாட சாத்திர சம்பிரதாயம்
காலாவதியாக
வள்ளலார் எனும் குடை,
விரித்தது கடை.
வாங்குபவர் யாரும் இல்லை
கடையை
மூடியது குடை.

காலநிலை மாற்றம் காட்ட
இதைவிடச்
சொல் வேறேது?.

சுட்டெரிக்கும்
வெயில் மறைக்க குடை விரித்து
அன்றாடம்
காய்ச்சிகள் வியர்வையில்
குளித்து
விரிக்கின்றார் கடை.

குளிரூட்டிய கடையில்
கண்ணியமாய்
கண்ட விலை தந்து வாங்குவோம்.
குடையில்
விரிந்த கடையில் ஐந்தும்
பத்தும்
குறைக்கப் பேசி நாவன்மை
காட்டுவோம்.

இரயில் நிலையத்தில் கூடத்
தனியறை
உண்டு, தாய்மைக்கு,

கைப்பிள்ளையின் பசியாற்ற
நைந்த
சேலையின் உதவி நாடும்
குடைக்குள்
விரிந்த கடைகள் பலவுண்டு
நாட்டில்…

One Comment on “மீனாட்சி சுந்தரமூர்த்தி/குடைக்குள் கடை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன