சசிகலா விஸ்வநாதன்/சேவை விலங்குகள்

பாய்ஸி காட்டும் காட்சி-3

இயற்கையாக அமைந்த சிறு காடு..
ஊடாக நடை உலா.
விந்தையான அறிவிப்புப் பலகை.
நேச விலங்குகளுக்கானது அல்ல;
சேவை விலங்குகளுக்கு மட்டும்.
பாசத்திற்கு ஒரு பங்கமா?
நேசத்திற்கு ஓரு தடையா?
கசிந்தது மனம்.

முப்பது மணித்துளிகள் கடந்திருக்கும் … நடையில்.
இரு சக்கர வண்டியில் முப்பது வயதுள்ளவர் ;
தானே இயக்கிக் கொண்டுவர;
பெரிய கருநிற நாய்; வண்டியின் பக்கமாக
ஓடி வந்ததைக் கண்டு திகைத்தேன்.
நாயின் கழுத்துப் பட்டையின் கயிறு
அவர் கையில்;

இயல்பாக அளவளாவ முனைய;
ஒருமணி நேர நடை
விரு விருவென…
நடை முடியும் தருவாய்…
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவர் தலை ஒருபக்கம் சாய;
பயந்தேன்; நான்.
கூடவே ஓடி வந்து கொண்டிருந்த நாய்
ஒரு பொத்தானை அழுத்த;
அவசர ஊர்தியில் மருத்துவர்கள்.
சிற்றறிவு பிராணி;
சமயாலோசனை! வியந்தேன்!
என் மருத்துவ மருமகள் சொன்னாள்;
இந்த மாதிரியான
சேவைக்காகவே
பயிற்சி தர;
தம் எசமானரை விட்டுப்பிரியாமல் இருந்து,
கடவுள் போல் காக்கின்றன.
தன்மானம் விட்டுப் போகாமல்;
தாமே தங்களை கவனித்துக் கொண்டு
தன் தனிமனித சுதந்திரத்தை இழக்காமல் இருக்க
இந்த சேவை பிராணிகள்,
நண்பருக்கும், உற்றோருக்கும்,
இறைவனுக்கும்; மேலான துணையன்றோ?

è

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/சேவை விலங்குகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன