சசிகலா விஸ்வநாதன்/இன்றைய நாங்கள்

உனக்கு என்னைத் தெரியாது.
என்னையே எனக்குத் தெரியாது.
என்னால் எதுவும் இயலாது;
என்பது உனக்குத் தெரியாது.
இதற்கு நீ ஒன்றும் செய்ய இயலாது.
இங்கு எதுவும் நேர் இல்லை.
இது எனக்கு உவப்பில்லை.
நான் இதற்கு ஒன்றும் செய்ய இயலாது.
எனவே,நான் பின்னே தப்படி
வைத்துப் போகிறேன்.
மறைகிறேன்; நான்
வெற்றுக் களிப்பில்,
மறைக்கிறேன்; என் தோல்வியை;
மதுவின் போதையில்.
உறைகிறேன்; வெற்று வெறுமையில்.
இதுவே இன்றைய நாங்கள்;
இளைஞர்கள்.
எங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
உங்களால் என்ன இயலும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன