தஞ்சாவூர் ஹரணி/சில தருணங்கள்..

பார்க்கிற
எல்லோரையும்
வயது வேறுபாடின்றிப்
பரவசப்படுத்திப்
பறக்க வைக்கிறது
கதவின் கைப்பிடியினை
இறுகப் பற்றியிருக்கும்
பட்டாம்பூச்சி…

வாழ்வின் சில
தருணங்கள் இப்படித்தான்
அமைந்து விடுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன