சுரேஷ் ராஜகோபால் / “சகிப்புத்தன்மை”

வாழும் வாழ்வில்
தளர்ந்து போனால்
வயதும் கூடிப் போனால்
பிடிவாதம் கூடிப் போகும்
யார் பேச்சும் கசக்கும்
நமக்கு நாமே
அந்நியமாகப் போவோம்.

அந்நாளில்
ஒன்று ஒன்றாகக்
கைவிடத் தொடங்குவோம்
முதலில் நமது கொள்கை மறப்போம்
அடுத்து நினைவை மறப்போம்
அதற்கடுத்து உறவுகளை மறப்போம்
எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும்
இலக்குகள் கிழித்தெறியப்படும்
வலுவாகப் பிடித்த பிரியம் தளர்ந்துவிடும்.

அதற்கு மேல்
இழப்பு பதட்டம் தராது
அதுவே ஆதாயமாக மாறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன