மீனாட்சி சுந்தரமூர்த்தி/கட்டணம் தேவையில்லை

வானில் திரியும் மீன்களையும்
மண்ணில்
விரியும் கடலையும் இரசிக்க
கட்டணம்
தேவையில்லை.

வணிக நோக்கின்றி மருத்துவம்
செய்தால்
கடவுள் என்று பெயரெடுக்க
வேண்டாம்
கட்டணம்.

நீரோடும் பாதைகளை செங்கல்
இட்டு
நிரப்பாதிருந்தால் இன்று
குடுவை
நீருக்கு விலை இல்லை.

மரம் வெட்டி,மலை தகர்த்து
மழை
தடுக்காதிருந்தால்
கழனி
நீருக்கு கட்ட வேண்டுமோ
கட்டணம்.

மக்களாட்சி தந்த உரிமை
மறந்து
வாக்கு விற்றதால்
உழைப்பு
வாய்தா ஆனது கட்டணம்
இன்றி.

நல்ல தேர்வு தவறுவதால்
இலஞ்ச
லாவண்யம் கட்டணமின்றி
அரங்கேற்றம்.

மருத்துவ மனைகளில்
விலை
போகும் இரத்தம், வீதிகளில்
கட்டணமின்றி
ஆறாய் ஓடும்.

மதங்கள் எல்லாமே அன்பை
போதிக்க
மனங்கள்
பகைமை வாங்கி இரக்கம்
தொலைக்கும்.

மானுடம் செழித்து வையம்
தழைக்க
ஊற்றாகும்
சிரிப்பதும்,கொடுப்பதும்
இன்சொலும்
நமதாக்கக்
கட்டணம் என்றும்
தேவையில்லை.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன