ஆர் வத்ஸலா/ வைராக்கியம்

ஐஸ் கிரீம் என்றால் எனக்கு உயிர்
உடல் கொழுப்பும்
ரத்தச் சர்க்கரையும்
எல்லைத் தாண்டி விட்டாலும்
நான் அதை கேட்கும் போதெல்லாம்
வாங்கித் தந்து விடுவாள்
என் மகள்
மறுக்க மனமில்லாமல்
ஆனால்
நான் சாப்பிடும் போது
அவளுடைய
கவலையும் கோபமும் நிறைந்த
முகத்தை திருப்பிக் கொள்வாள்
வேறு பக்கம்

எவ்வளவு மெதுவாக
சாப்பிட்டாலும்
இரண்டு கரண்டி ஐஸ்கிரீமும் தீர்ந்து விடும்
ஐந்து நிமிடத்தில்
அது தந்த நிறைவு போதை
ஆறு நிமிடத்தில்
மகளின் முகம் இயல்பு
நிலைக்குத் திரும்ப ஆகும்
அரை மணிநேரம்
என் குற்ற உணர்ச்சிக்கு
ஒரு மணி நேரம்

  • நள்ளிரவில் எழுப்பி என்னை
    தாக்காமலிருந்தால் –

சபதமெடுப்பேன் தான்
ஒவ்வொரு முறையும்
இனி அந்த சனியனைத்
தொடுவதில்லையென


One Comment on “ஆர் வத்ஸலா/ வைராக்கியம்”

Comments are closed.