தனி நெடு மொழி/கோ யுன்

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

தனிமையில் உழன்ற கம்யூனிஸ்டான
யோஸ் சாரமாகோ ஒருமுறை சொன்னார்
மகிழ்ச்சியும் துன்பமும்
ஒருசேரச் செல்கின்றன
ஏனென்றால் அவை தண்ணீரும் எண்ணையும் இல்லை.
நான் சம்மதித்துத் தலையசைக்கிறேன்.
தலையசைக்கிறேன்.
பிறகு நான் ஆட்சேபணை தெரிவிக்கிறேன்:
மகிழ்ச்சி ஒரு துக்கத்தையும் அறியாது
துக்கம் ஒரு மகிழ்ச்சியையும் அறியாது.
நான் திடீர் அறிவொளித் தெளிவினை
நிராகரிக்கிறேன்
உலகத்தின் எல்லா உரையாடல்களுமே
இரவு முழுவதுமான தவளைக் கூச்சல்கள்
இறுதியில் அவை ஒவ்வொன்றும் தனி நெடு மொழி.
மலர்களும், வசந்தத்தின் மலர்கள் மேலானத் திடீர்
பனித்துளிகளும், ஒவ்வொன்றும்
ஒரு தனி நெடு மொழி
கடைசி வரைக்கும்.
எது உண்மையிலேயே அதிசயக்கத்தது என்றால்
பேராசையும் காமமும் நிறைந்த இவ்வுலகில்
இல்லை, ஒரு முறை கூட
உரையாடல் என்பது இல்லை
இறுதி வரை ஒவ்வொரு தனிமையும்
அவ்வளவு கடின ஓட்டினால் மூடப்படிருப்பதால்
என்றுமே தனியாக இருப்பதென்பது
எந்தப் பொருளையும் தருவதில்லை
————

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன