எஸ்ஸார்சி/புத்தகங்கள் எதற்கு?

23/4/24

எண்ணும் எழுத்தும்
கண்கள்
மனிதனைப் பிற உயிரினங்களிடமிருந்து
வேறுபடுத்தி
உயர்த்திக்காட்டுவது
மனிதச் சிந்தனை
அவைகளைத்தூக்கிப்பிடிப்பன
புத்தகங்கள்.
நமது மண்ணில்
எழுதாக்கிளவியான
வேதங்களும்
இன்று புத்தகங்களாகி
வலம் வருகின்றன
நமது கடவுள்கள்
கைகளில் புத்தகங்கள்
வைத்திருக்கிறார்கள்
ஓயாமல் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்
நமது நீதிமன்றங்களில்
சத்தியம் செய்யப்
புத்தகங்களே
காட்சியாகின்றன
கற்ற கல்வியும்
பெற்ற ஞானமும்
பிறிதின் நோய்
தந்நோய் போல்போற்றக்
கற்றுத்தரல் வேண்டும்
அதுவே பிரதானம்
பேசுகிறது வள்ளுவம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன