சசிகலா விஸ்வநாதன்/உலக புத்தக தினம்


அழகிய சிங்கரின் என்பாவாக என் பா என்பா சரமாக இன்று
பாடப் புத்தகம்

இன்று உலக புத்தக தினம்!

“அப்படியா” என்றது என் மனம்!

பாடப் புத்தகங்களைப்
படித்ததினால் மட்டுமே

மனம் நிறை வாழ்வு.

🪷

நூலகத்தில் வேண்டிய புத்தகங்கள் இருந்தன.

அறிவியல் சஞ்சிகைகள் மறு பதிப்பு அச்சுப்
பிரதிகளால்

என் புத்தக நிலைப் பேழை நிரம்ப;

இன்று கைநிறைய காசுடன்.

🪷
புத்தகங்கள் விலை எழுபதுகளில் நூறுகளில்;

பணமில்லை; அவைகளை வாங்க அன்று.

மனமில்லை; இன்று
புத்தகங்கள் வாங்க

கையில் இருக்குது பணம்.
🪷
பணத்தினால் ஆகும் பயன்தான் என்ன?

பக்கத்து வீட்டு இளம் சிறார்களுக்கு

பணத்தை பணம் என்றே கருதாமல்

வாங்கியளிக்க மனம் நிறைகிறது
🪷

சிறு நூலகம் வீட்டில் அமைக்க;

ஒரு எண்ணம்; பாடப் புத்தகங்களால்

நிரப்பப்படும்; பள்ளிச்
சிறுமியர் வந்து

படிக்க; மனம் நிறையும்


23-4 2024

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன