வளவ. துரையன்/ஒளிகிறான்

23-4-24 இன்று இணையவழிக் கவியரங்கில் வாசித்தது.
————–+———-

—————–++–
காலையில் அழகாகக் கனிவுடன் இருக்கிறான்.

அவன் பார்வையில் கையில் கலப்பையுடன் செல்லும் கடும்
உழைப்பாளிகள்,
கட்டு சுமக்க, களையெடுக்க அறுப்பறுக்கப் போகும் மகளிர் கூட்டம்
மேலும்
கசங்காத மடிப்பு ஆடையுடன் அலுவலகம் போகும் கருத்தாலுழைக்கும்
அதிகார அடிமைகள்

மதியம் உச்சி வேளையிலும் அவர்களைப் பார்க்கிறான். ஆண்டைகளும் கொழுத்தவர்களும்
கார்ப்பரேட் முதலாளிகளும்
அளித்த வெப்பப் பெருமூச்சுகளால்

வாடிய கீரைத் தண்டாய் வதங்கிப் புலம்புகின்றார்

அவன் கண்கள் சிவக்கின்றன

என்ன செய்யலாம் என்று சிந்திக்கின்றான்

ஒன்றும் செய்ய முடியாமல் மாலையில் மஞ்சள் அழுகையுடன்
மலைகளில் ஒளிகிறான் கதிரவன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன