அழகியசிங்கர்/உலக புத்தக தினம்

திரும்பவும் சொல்கிறேன்
புத்தக தினத்தன்று
ஒரு புத்தகத்தை
எடுத்துப் படிப்பது
என் வழக்கமில்லை

எப்போதும்
புத்தகக் கையோடுதான்
இருப்பேன்

சிலசமயம் படிப்பேன்
சிலசமயம் படிக்க மாட்டேன்

கையில் புத்தகம் வைத்திருப்பேன்
ஆனால்
படிக்க மாட்டேன்
புத்தகம் இல்லாவிட்டாலும்
அதைப் பற்றி யோசனையில் இருப்பேன்

இன்று உலக புத்தக தினத்தை
எல்லோரும் கொண்டாடுகிறார்கள்
இன்றாவது
புத்தகம் படிக்க வேண்டும்
என்கிறார்கள்

ஆனால்
எனக்குத் தினமும் உலக
புத்தக தினம்

2 Comments on “அழகியசிங்கர்/உலக புத்தக தினம்”

  1. மாம்பலத்தில் புறநகர் டிரெயினில் ஏறியதும் புத்தகத்தில் முகத்தை மூடிய மெளலியா இது (

Comments are closed.