மயில் இறகை மட்டுமல்ல
இதயங்களுக்கும்
இறகு முளைக்க வைத்து வித்தை
செய்யும் விநோதம் தான் புத்தகம்.
மௌனங்களால் இழைக்கப்பட்ட
வசீகர ராகம்.
ஆத்மாவை அணைத்துக்கொள்ளும்
அச்சடித்த காகிதம்.
எழுத்துகளின் கூட்டத்தில்
ஏராளம் வாசகர்கள்
தொலைந்துபோனதுண்டு.
ஆச்சரியம் என்னவென்றால்…
தொலைந்தவர்கள்
கண்டுபிடித்தவைகள்தான் அதிகம்.!
பக்கம் பக்கமாய்ப் புத்தகங்கள்
பக்கம் பார்த்து வாழ்க்கையை
வாழக்கற்றுக் கொடுக்கும்
வாழ்க்கைச் சுவடுகள்.
ஏக்க மூச்சுக்காற்று களால் ..
சிந்தும் கண்ணீர்த் துளிகளால் ..
சிரிக்கும் சத்தங்களால் ..ஒலிக்கின்ற
ஒவ்வொரு பக்கத்திலும் வாசகனைப்
பக்கத்தில் உட்கார வைக்கும் உயிருள்ள
உணர்வுத் தோழன்தான் புத்தகம்.
One Comment on “முனைவர் பாஸ்கரன்/புத்தகம்”
Comments are closed.

தங்களின் பணி பாராட்டுக்கு உரியது. இணைய இதழ் வரலாறு வழி வாழ்த்துக்கள்.நன்றி.