சசிகலா விஸ்வநாதன்/போராட்டம்பாய்ஸி காட்டும் காட்சி-4

இன்று ஒரு விருந்தினர்;
ஏற்கனவே அறிந்தவர்களே!
அயல் நாட்டில் தனியாக
வாழ்க்கைப் போர் பூமியில்;
தனியளான ஒரு இளம் தாயாக சந்திப்பு…
பதினேழு வருடங்கள்
தாண்டி..
ஒரு மீள் சந்திப்பு.
தாயும் மகளும் பெயரனுமாக!
வாழ்வில் போராட்டம் இருப்பது இயற்கை…
போராட்டமே வாழ்க்கை என்றாகியது; இவளுக்கு;
கை மலர் கொத்தும்,
தொட்டிச் செடியுமாக.
எப்போதும் போல் உற்சாகத்தின் உச்சியில் அவள்!

தன்னுள் சோகத்தை
இயல்பாக கடக்கும்
சாமர்த்தியம்!
தன் மணமுறிவு;
பிறவியிலேயே
புறம் தவிர்மையில்
இரு சிறார்கள்;
அனல் என பொசுக்கும் வாழ்வு.
சுமைகளை எளிதாக கடந்து
போவது போல தெளிவையில்; அவள்.
அஞரின்பரான அவர் கணவரோடு தொடர்
சட்டப் போராட்டம்!
தந்தையே புறம் அறியா
வாலிப வயது மகனைக் கடத்த;
சிறைக்குப்போகமலே
சமுதாயச் சிறையில்
அவள்!
மணமகனைத் தேடி
மணமுடித்த பெற்றோர் குற்றமா?
வன்முறை தாங்காமல் சட்ட
உதவியை நாடின பெண்ணின் குற்றமா?
சுதந்திரமாக வலியற்று,
வலிமையாக வாழ ஒரு
பெண்ணிற்கு உரிமை இல்லையா?
புறம் தெளிவின்மையான மகனைத் தேடி அலையும்
ஒரு தாய்க்கு என்ன பதில் வைத்திருக்கிறது;
இந்த சமூகம்?

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/போராட்டம்பாய்ஸி காட்டும் காட்சி-4”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன